Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் தயாரிப்பில் மம்மூட்டி & மோகன்லால் – நெட்பிளிக்ஸில் புதிய ஆந்தாலஜி!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (15:54 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆந்தாலஜிக்காக மீண்டும் இணைய உள்ளனர்.

மலையாள சினிமாவின் இருபெரும் சூப்பர் ஸ்டார்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றனர் மம்மூட்டியும் மோகன்லாலும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக மலையாள சினிமா சங்கத்தின் நிதிக்காக ஒட்டுமொத்த மலையாள சினிமா கலைஞர்களும் சேர்ந்து உருவாக்கிய ட்வண்ட்டி ட்வண்ட்டி என்ற படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் பிரம்மாண்டமாக உருவாக்கும் ஆந்தாலஜியில் இருவரும் நடிக்க உள்ளனர். இந்த ஆந்தாலஜியின் கதைகள் அனைத்தும் எழுத்தாளர் எம் டி வாசுதேவன் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட உள்ளன. மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களான பிரியதர்ஷன், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகியோர் இந்த ஆந்தாலஜியை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த சீரிஸை நெட்பிள்க்ஸ் மூலமாக நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளாராம். இதில் கமலும் ஒரு குறும்படத்தில் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments