Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் பிறந்தநாளில் மணிரத்னம் படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ்!

கமல் பிறந்தநாளில் மணிரத்னம் படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ்!
, வியாழன், 19 அக்டோபர் 2023 (07:27 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் ஆய்த எழுத்து ஆகிய படங்களுக்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்த கலை இயக்குனர் மிலன் உடல் சென்னை வந்தது… இன்று அடக்கம்!