Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடம்ப நல்லா பாத்துக்க சொல்லுங்க… அல்போன்ஸ் புத்ரனுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:25 IST)
நேரம், பிரேமம் மற்றும் கோல்ட்  ஆகிய படங்களுக்கு அடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு கிஃப்ட் என பெயர் வைக்கப்பட்டது. படத்தில் இளையராஜா இசையில் 7 பாடல்கள் இடம்பெறும் என போஸ்டரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஆனால் இப்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

இயக்குனர் அல்போன்ஸுக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக அவரே அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பாடலை உருவாக்கிய அல்போன்ஸ், அதை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் மூலமாக கமல்ஹாசனிடம் சேர்த்திருந்தார்.

அதையடுத்து கமல்ஹாசன் ஆடியோ மெஸேஜ் ஒன்றை அல்போன்ஸ் புத்ரனுக்கு அனுப்பியுள்ளார். அதை  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில் “வணக்கம். அல்போன்ஸ் புத்ரனின் பாட்டு கேட்டேன். அவருக்கு உடம்பு சுகமில்லை என்று சொன்னீங்க. ஆனால் மனசு நல்லா இருக்கு. சந்தோஷமாக இருக்கட்டும். வாழ்த்துக்கள். உடம்ப நல்லா பாத்துக்க சொல்லுங்க.. டேக் கேர் அல்போன்ஸ்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments