கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் நடந்ததால் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் எதிர்பார்த்ததை விட அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சோனி லிவ் தளத்திடம் கோரிக்கை வைக்க, அவர்களோ ஒப்பந்தப்படிதான் நடப்போம். அதனால் கூடுதல் பணம் தரமாட்டோம் எனக் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.