கபிலன் வைரமுத்து கண்டுபிடித்த தமிழ் வார்த்தை
கவியரசு வைரமுத்துவின் மகனும் தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களின் ஒருவருமான கபிலன் வைரமுத்து, ராய் லட்சுமி நடித்த சின்ட்ரெல்லா என்ற படத்திற்காக ஒரு பாடல் பாடி எழுதியுள்ளார்
இந்த பாடலின் அவர் ஆலம்வஞ்சி என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். தமிழில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வார்த்தைக்கு அவர் மூன்று விதமான அர்த்தம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆலம் என்பது ஆலமரத்தை குறிக்கும் என்றும் ஆலமரம் போல் தழைத்தோங்கும் பெருமையுடைய வஞ்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆலம் என்பது மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர் என்றும் மங்களகரமான நிறத்தை உடைய வஞ்சி என்றும் அவர் இரண்டாவது பொருளாக குறிப்பிட்டுள்ளார். மூன்றாவதாக ஆலம் என்பது வானத்தை குறிக்கும் என்றும் வானதேவதை போன்ற வஞ்சி என்றும் கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்
ஆலம்வஞ்சி என்று தொடங்கும் இந்த பாடலை ஜிவி பிரகாஷ் குமார் பாட உள்ளார் பாடியுள்ளார் என்பதும் அஸ்வமித்ரா என்பவர் இந்த பாடலை கம்போஸ் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வினோ வெங்கடேஷ் இயக்கிய இந்தப் பாடல் நாளை முதல் சிங்கிள் பாடலாக வெளிவர உள்ளது என்பது என்று அறிவிக்கப்பட்டுள்ளது