Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சுல்தான்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு: கார்த்தி ரசிகர்களுக்கு விரைவில் விருந்து!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (13:59 IST)
’சுல்தான்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு
கார்த்தி நடிப்பில் உருவாகி வந்த ’சுல்தான்’ திரைப்படம் கடந்த 3 ஆண்டுகளாக தாமதமாகி வரும் நிலையில் சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்ற செய்தியைப் பார்த்தோம் 
 
மேலும் கொரோனா விடுமுறையில் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளும் 90% முடிந்துவிட்டது என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்திற்கு இந்த படம் சென்றுள்ளது 
 
இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் கார்த்தி முதன் முதலில் தனது பகுதியின் டப்பிங் பணியை பேசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் டப்பிங் பணி முடிவடைந்து சென்சாருக்கு செல்லும் என்றும் வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments