Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுவரை இல்லாத அளவுக்கு பட்ஜெட்… விஷாலின் அடுத்த பட அப்டேட்!

இதுவரை இல்லாத அளவுக்கு பட்ஜெட்… விஷாலின் அடுத்த பட அப்டேட்!
, புதன், 1 செப்டம்பர் 2021 (10:15 IST)
நடிகர் விஷால் நடிப்பில் அடங்கமறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.

அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் இவ்வளவு நாள் சும்மா இருந்த அவர் இப்போது விஷாலை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அண்மையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பைவ் ஸ்டார்ஸ் குரூப் கதிரேசன் தயாரிக்க உள்ளாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். இதுவரை விஷால் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் இதற்கான முன் தயாரிப்புப் பணிகளை அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு செய்து வருகிறாராம் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெண்டு நாள்தான் நடிச்சேன்… பிரச்சனைக்கு பதிலளித்த யோகி பாபு!