Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கமல் பாடல்!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கமல் பாடல்!
, திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (15:40 IST)
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இப்போது பாண்டிச்சேரியில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூன்று பேரும் நடிக்கும் காட்சிகள் பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில் சத்யா படத்தில் கமலும் அமலாவும் இடம்பெறும் வளையோசை பாடலை போன்ற காட்சிகளில் மூன்று பேரும் நடிப்பது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மாதத்தில் ரிலிஸுக்குக் காத்திருக்கும் 25 படங்கள்! சூடு பிடிக்கும் தமிழ் சினிமா ரிலிஸ்!