தமிழில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்த அவர், அடுத்து இப்போது கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்க, டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்க்காக எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார்.
தொழில்நுட்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் இப்போது ஷூட்டிங் தொடங்கியுள்ளது.