தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர், பைரவா, மகாநடி, தானா சேர்ந்த கூட்டம், ரெமோ, சர்க்கார், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இவரது சகோதரி ரேவதி சுரேஷ் தற்போது இயக்குனராகி உள்ளார். இவர், சில ஆண்டுகளாக தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனராக பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், தற்போது ஒரு புதிய குறும்படம் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தேங்க்யூ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ், தன் சமூக வலைதளத்தில், தன் சகோதரி ரேவதிக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே மலையாளத்தில் ஒரு படம் தயாரித்துள்ள நிலையில்,விரைவில் தன் சகோதரியின் படத்தையும் தயாரிப்பார் என தெரிகிறது.