சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் வரும் சுதந்திர தினம் வரையை தொடர் விடுமுறை இருப்பதால் இந்த படம் 500 கோடி வசூலை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் ஜெயிலர் படத்தை பார்த்து இயக்குனர் நெல்சனுக்கு பாராட்டு தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அந்த வகையில் தற்போது கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜெயிலர் படத்தை பார்த்து உள்ளார். அவர் ஜெயிலர் படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த போது எடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து மேலும் சில முதல்வர்களும் ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது.