பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு" அரிவராசனம் " விருதை கொடுத்து கெளரவிக்கிறது கேரளா அரசு.
தேனில் எந்தத் துளி தித்திப்பு என்று கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.. அப்படித்தான் பாடகி பி. சுசீலா அவர்களின் அத்தனை பாடல்களும் கேட்பவர்களுக்கு தேன் துளிகள் போன்றது.
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மாலை மகரவிளக்கு பூஜை நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பூஜையின் போது கேரள அரசு சார்பில் அய்யப்பன் பற்றிய சிறப்புகளை பரப்பும் கலைஞர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அரிவராசனம் விருது வழங்கப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். வருகிற 17-ந் தேதி இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. கூடவே ரூ.1 லட்சம் பரிசும் கிடைக்கும்.
இந்த தகவலை கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.சென்ற ஆண்டு அரிவராசனம் விருதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் போன்றோரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.