Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியாவில் மட்டும் கேஜிஎப் ரிலீஸ்… இந்தி டப்பிங் தாமதம்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:42 IST)
கேஜிஎப்பின் இரண்டாம் பாகம் தென்னிந்திய மொழிகளில் முதலில் ரிலிஸாகி விட்டு பின்னர் இந்தியில் ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் சாதனை படைத்தது.

இந்த படத்துக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு அதிகமாக உள்ள நிலையில் சேட்டிலைட் உரிமையை மொத்தமாக ஜி நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுக்கு சேர்த்து மிகப்பெரிய தொகைக் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பேன் இந்தியா படமாக ரிலிஸாக முடிவு செய்திருந்த நிலையில் இப்போது தென்னிந்தியாவில் மட்டும் முதலில் ரிலீஸ் செய்துவிட்டு பின்னர் இந்தியில் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

வித்தியாசமான கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய பூஜா ஹெக்டே!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

‘விஜய் காசு கொடுக்காமல் கூட்டம் கூட்டியுள்ளார்… போஸ் வெங்கட்டின் கருத்து ஏற்புடையதல்ல’ – இயக்குனர் அமீர் காட்டம்!

கங்குவா தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதது நல்லதுதான்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments