Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சஞ்சய் தத் உடல்நிலை – சிக்கலில் கேஜிஎஃப் படக்குழு!

சஞ்சய் தத் உடல்நிலை – சிக்கலில் கேஜிஎஃப் படக்குழு!
, வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:05 IST)
நடிகர் சஞ்சய் தத் சினிமா உலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ஜே ஜி எப் படக்குழுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எப்போது வரும் என்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிது எதிர்பார்க்கப்படும் படமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2ன் புதிய அப்டேட் ஒன்றை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. யஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதீரா யார் என்பது பற்றி தகவலை படக்குழு தற்போது அறிவித்தது.. ஆம், யூகங்கள் உண்மையாகியுள்ளன, அதாவது அதீரா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் சஞ்சய் தத் தனது உடல்நிலைக் காரணமாக சினிமா உலகில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்குக் காரணம் அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுதான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரை வைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ள கே ஜி எப் படக்குழு அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா: அதிர்ச்சியில் திரையுலகம்