கன்னட சினிமாவை உலகம் முழுவதும் திருப்பி பார்க்க வைத்த படம் கே.ஜி.எஃப்-1. இப்பபடத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் பிரஷாந்த் நீல்ஸ், யஷ் கூட்டணியில் கே.ஜி.எஃப் -2 படம் உருவானது. இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி இந்தி சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்திருந்தாலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, இப்படம் குறித்து எந்தக் கருத்துக் கூறவில்லை. ஆனால், கமலின் விக்ரம் படம் குறித்து கருத்துக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்திற்கு அடுத்து, மகேஷ்பாபு, பிரஷாந்த் நீல்ஸை சந்திக்க நினைத்ததாகவும், ஆனால், அவர் அதற்குள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரபாஷுடன் (சலார்) படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியதால், மகேஷ்பாபு ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால்,தான் மகேஷ்பாபு, கே.ஜி.எப் 2 படத்தைப் பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை எனத் தகவல் வெளியாகிறது.