வலிமை மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் தீபாவளியை குறிவைத்து உருவாகி வருகின்றன.
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படம் ஜூலை மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இப்போது தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறதாம் படக்குழு. ஆனால் அதே தீபாவளி நேரத்தில்தான் அண்ணாத்த மற்றும் வலிமை ஆகிய படங்களும் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மூன்று பெரிய படங்கள் ரிலீஸாக உள்ள நிலையில் போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.