Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் ராம் சரண் தேஜா படத்தின் நாயகி இவர்தான்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (08:53 IST)
தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் ஷங்கர் இயக்க உள்ள படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் இப்போது கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில் இப்போது கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதிர்பார்த்த அதே தேதி தான்..!

வரலாற்றில் இன்று… இந்திய கிரிக்கெட் ரசிகர்களை யுவ்ராஜ் சிங் மெய்சிலிர்க்க வைத்த நாள் !

ஹெச் வினோத்தைக் கொலை செய்துவிட்டு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வேண்டும்- பார்த்திபனின் விபரீத ஆசை!

நானே மொதல்ல விமல் ரசிகன்தான்… மேடையில் புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments