சமீபத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலக உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் சினிமா விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திலும், அவரின் பெயர் எடுக்கப்பட்டுள்ளது. வெறும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மட்டுமே இடம்பெறும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான கிருத்திகா உதயநிதி முழு பொறுப்பையும் ஏற்க உள்ளாராம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.