Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26 ஆண்டுகால சட்ட போராட்டம்… கவுண்டமணிக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!

vinoth
சனி, 16 மார்ச் 2024 (09:33 IST)
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் கவுண்டமணி. இடையில் சில ஆண்டுகள் படம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் கவுண்டணி 26 ஆண்டுகளாக நடத்தி வந்த ஒரு வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.


கவுண்டமணி, 1996-ம் ஆண்டு நளினி பாய் என்பவருக்குச் சொந்தமாக சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்த நிலத்தை  வாங்கி அதில் ஒரு வணிக வளாகத்தைக் கட்ட திட்டமிட்டார். அதற்காக ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்திடம் கட்டடம் கட்டும் பணியை ஒப்படைத்தார். இந்த பணிக்காக 3 கோடியே 58 லட்சம் ரூபாய் பணம் ஒப்பந்தமாகப் போடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கான பணம் முழுவதையும் கட்டிய பின்னரும் கட்டுமான நிறுவனம் கட்டடத்தை கட்டும் பணியை தொடங்கவேயில்லை என கவுண்டமணி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் 46 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே கட்டட பணிகள் நிறைவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து இடத்தை கவுண்டமணியிடம் ஒப்படைக்க வேண்டும். 2008 ஆம் ஆண்டு முதல் மாதம் ஒன்றுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டுமென உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கட்டுமான நிறுவனம். ஆனால் இப்போது அந்த மேல் முறையீட்டை ரத்து செய்துள்ளது நீதிமன்றம். இதன் மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டத்தில் கவுண்டமணிக்கு சாதகமாக முடிவு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments