Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடைவிடுமுறையை ’குரங்கு பெடல்’ போட்டு கொண்டாடலாம்! – 90ஸ் கிட்ஸை மயக்கும் ட்ரெய்லர்!

Prasanth Karthick
திங்கள், 29 ஏப்ரல் 2024 (19:47 IST)
முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி கமலக்கண்ணன் இயக்கிய வெளியாகவுள்ள ‘குரங்கு பெடல்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



தமிழில் ‘மதுபானக்கடை’ உள்ளிட்ட கவனிக்கத் தகுந்த படங்களை இயக்கியவர் கமலக்கண்ணன். தற்போது இவர், ராசி அழகப்பன் எழுதிய கதையை மையமாக கொண்டு ‘குரங்கு பெடல்’ என்ற சிறார்கள் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் ட்ரெய்லரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படம் முழுக்க 90களின் காலக்கட்டத்தில் நடப்பதாக காட்டப்படுகிறது. வாடகை சைக்கிள் கடைகள், கோலி குண்டு விளையாட்டு, குளத்து நீச்சல் என 90ஸ் கிட்ஸின் வாழ்வியலை பிரதிபலிப்பதாக காட்சிகள் உள்ளன. முழுக்க சிறுவர்கள் மற்றும் அவர்களை மையப்படுத்தியே கதை நகைச்சுவையாக நகர்வதாக உள்ளது. இந்த ட்ரெய்லர் வளர்ந்த 90ஸ் கிட்ஸை ஈர்க்கும் விதத்தில் உள்ளது. ஏற்கனவே பல திரைப்பட விழாக்களில் இடம்பெற்று கவனம் பெற்ற குரங்கு பெடல் திரையரங்கிலும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments