பெண்களுக்கென வாரிசு பிரத்யேக காட்சி: விஜய் மக்கள் மன்றம் ஏற்பாடு
விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதை பார்த்தோம்
குறிப்பாக இந்த படத்திற்கு பெண்கள் உள்பட குடும்ப ஆடியன்ஸ் குவிந்து வருவதாகவும் படம் பார்த்தவர்களை மீண்டும் மீண்டும் பார்த்து வருவதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் உள்ள ஒரு திரையரங்கில் வாரிசு திரைப்படத்திற்கு பெண்களுக்கு என பிரத்தியேக காட்சியை விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த படத்தை பார்க்க வந்த பெண்களை வரவேற்கும் வகையில் மேள தாளங்கள் இசைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வாரிசு படத்தை பார்த்த நிலையில் அவர்கள் விஜய் வரும்போதெல்லாம் கைதட்டி கரகோஷம் செய்தனர்]என்பது குறிப்பிடத்தக்கது.