சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திவரும் ஆஸ்ரமம் என்ற பள்ளிக்கு வாடகை பாக்கி இருப்பதாகவும், அந்த இடத்தை உடனடியாக அவர் காலி செய்ய வேண்டும் என்றும், வரும் 2021 ஏப்ரல் மாதத்துக்குள் காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இதனை அடுத்து சிஸ்டம் குறித்து பேசும் ரஜினிகாந்த் அவர்களே வாடகை பாக்கி வைத்துள்ளது கேள்விக்குரியதாக உள்ளது என்று அவரது எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது என்றும் வாடகை பாக்கி உள்ளது என்பதில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு காலத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்ற முடியவில்லை என்றும் இதனை அடுத்து நாங்கள் கால அவகாசம் கேட்டத்தை அடுத்து ஏப்ரல் 2021 வரை நீதிமன்றம் காலக்கெடு கொடுத்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்
லதா ரஜினிகாந்த்தின் விளக்கத்தை அடுத்து வாடகை பாக்கி இல்லை என்பதை அவரது எதிர்ப்பாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்