Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் முறையாக லாரன்ஸுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா!

முதல் முறையாக லாரன்ஸுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா!
, சனி, 11 மார்ச் 2023 (08:26 IST)
மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் புகழ் வெளிச்சம் பெற்றவர் இயக்குனர் ரத்னகுமார். இதையடுத்து அவர் பெயரில் பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய ஆடை மற்றும் குலுகுலு ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை ஏமாற்றின. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை இலாகாவில் முக்கிய நபராக இருந்து வரும் ரத்னகுமார் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களை லாரன்ஸ் முடித்ததும் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது நடந்தால் முதல் முறையாக ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா நடிக்கும் படமாக அது அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த்ரி மஸ்கிட்டீயர்ஸ்… இதுவரை வெளிவராத கவுண்டமணியின் புகைப்படத்தைப் பகிர்ந்த குஷ்பு!