லியோ படத்தின் புதிய ஜிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றிக்குப் பின் நடித்து வரும் படம் லியோ. இப்படத்தை மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜயுடன் இணைந்து, திரிஷா, அர்ஜூன், மிஸ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், நடிகர் விஜய் வெகேசனுக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் #HaroldDas என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று 5 மாலை மணிக்கு வெளியாகும் என்று லியோ படக்குழு அறிவித்தது.
அதேபோல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் நடிகர் அர்ஜூனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து, லியோ படத்தில் ஹரோல்ட் தாஸ் கேரக்டரில் நடித்துள்ள அவர் சம்பந்தப்பட்ட ஜிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். இப்படத்தில் பயங்கர வில்லனாக நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.