Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு முன்னரே 4 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த சங்கத்தமிழன் விநியோகிஸ்தர்?

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (19:30 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாக இருந்த நிலையில் திடீரென ஒருசில பிரச்சனை காரணமாக அன்றைய நாள் இரவு காட்சியில் இருந்து வெளியானது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்னரே இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கிய லிப்ரா புரடொக்சன்ஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ 4கோடி நஷ்டம் என்று தெரியவந்துள்ளது 
 
சங்கத்தமிழன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை  ரூ.11 கோடிக்கு லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் பெற்றிருந்தது. இதனை அடுத்து அந்நிறுவனம் ஏரியா வாரியாக பிரித்து விற்பனை செய்த நிலையில் ரூபாய் பதின்மூன்று கோடி அளவுக்கு வந்ததால் அவருக்கு இரண்டு கோடி லாபம் என்று கருதப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென அந்த படம் ஒருசில பிரச்சனை காரணமாக வெள்ளிக்கிழமை காலை ரிலீசாகவில்லை. இதனையடுத்து அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், பேசிய விலையைத் தர முடியாது என்றும் முதல் மூன்று காட்சிகள் இந்த படம் திரையிடப்படாததால் தங்களுக்கு நஷ்டம் என்றும் எனவே பேசிய தொகையிலிருந்து பாதி மட்டுமே கொடுப்பதாகவும் தெரிவித்ததால் லிப்ரா நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது 
 
இதனை அடுத்து ரூ.13 கோடிக்கு விற்பனை செய்த இந்நிறுவனத்திற்கு ரூ.7 மட்டுமே கிடைத்ததாகவும், இதனால் அந்நிறுவனத்திற்கு ரு.4 கோடி இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
குறிப்பாக சென்னையில் ரூ1 கோடிக்கு இந்த படம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சென்னை உரிமையை வாங்கிய விநியோகஸ்தர் 35 லட்சம் ரூபாய் மட்டுமே தருவதாக கூறியதால் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments