மாஸ்டர் திரைப்படம் எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பியும் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை நேற்று படக்குழுவினர் உறுதி செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படத்தை பற்றி பல் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது ஹாலிவுட்டில் வெளியான பைட் கிளப் படத்தின் காப்பி போல தெரிகிறது என விமர்சனங்கள் எழுந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் அப்படி எல்லாம் இல்லை. மாஸ்டர் ஸ்ட்ரைட் ஆக்ஷன் திரைப்படம். அதில் குறியீடு எல்லாம் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.