Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடியோடு வெளியேற்றப்பட்ட ரத்னகுமார்.. லோகேஷ் அடுத்த பட அறிவிப்பில் ஒரு ஆச்சரியம்..!

Siva
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (11:49 IST)
லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் ரஜினி - லோகேஷ் படத்தில் இருந்து ரத்னகுமார் விலக்கப்பட்டார்

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தை ரத்னகுமார் இயக்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது வந்த படத்திற்கும் வேறு இயக்குனரை லோகேஷ் கனகராஜ் முடிவு செய்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் என்ற திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரெமோ மற்றும் சுல்தான் படங்களை இயக்கிய நிலையில் தற்போது மூன்றாவது படமாக பென்ஸ் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார்.

இந்த படத்தின் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் லோகேஷ் கனகராஜ் டீமில் இருந்தே ரத்னகுமார் விலக்கப்பட்டு விட்டதாக இந்த அறிவிப்பின் மூலம் தெரிய வருகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments