Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி லோகேஷ் படம் தள்ளிப் போகிறதா? குறுக்கே புகுந்த தெலுங்கு நிறுவனம்!

ரஜினி லோகேஷ் படம் தள்ளிப் போகிறதா? குறுக்கே புகுந்த தெலுங்கு நிறுவனம்!
, வியாழன், 29 ஜூன் 2023 (07:16 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் நான்கே படங்களில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று வரும் நிலையில் முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் இயக்கத்தில் பிரபாஸை நடிக்க வைக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முன்பணம் கொடுத்து வைத்திருந்தது. ஆனால் அந்த படத்தை இயக்காமல் லோகேஷ் வரிசையாக தமிழில் படங்களை இயக்கி வந்தார்.

இந்நிலையில் இப்போது சம்மந்தப்பட்ட நிறுவனம் லோகேஷ், லியோ படத்தை இயக்கி முடித்ததும் தங்கள் படத்தை இயக்க வேண்டும் என முட்டுக்கட்டை போட்டுள்ளதாம். இதனால் லியோ படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்கும் முனைப்பில் இருந்த லோகேஷ்க்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மானுடர் அனைவரும் சமம்’’ ‘’மாமனிதன்’’ படம் பார்த்த கமல்ஹாசன் டுவீட்