மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த மதுர வீரன் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான அடையாளத்தைப் பெற்று தந்தது.
இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு பின்தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஆக்ஷன் காட்சியில் விஜயகாந்தின் ஹிட் பாடலான நீ பொட்டு வச்ச தங்கக் கொடம் என்ற பாடலை இளையராஜா ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தலாம் என்று நினைத்திருந்தார்களாம். அதற்கு இளையராஜாவும் சம்மதம் தெரிவித்திருந்தாராம். ஆனால் அதற்குள் லப்பர் பந்து படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி விட்டதால் இப்போது அந்த பாடலை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாம்.