Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாங்களேன் ஒரு படம் பண்ணலாம் என கொக்கிபோட்ட லைகா… நழுவிய முருகதாஸ்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (16:12 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில் அதை தன் பக்கம் இழுக்க லைகா முயற்சி செய்துள்ளது.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய் 65 படத்துக்கு முதல் முதலில் போடப்பட்ட பட்ஜெட் 180 கோடி ரூபாய். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் பட்ஜெட்டை 130 கோடியாக குறைக்க சொல்லி சன் பிக்சர்ஸ் நிறுவனம் வற்புறுத்தவே இழுபறியான சூழல் உருவானது.

ஆனால் வேறு வழி இல்லாததால் அவர்கள் சொன்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்க முருகதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த 130 கோடியில் சன் பிக்சர்ஸ் விஜய்யின் சம்பளம் 70 கோடியை நேரடியாக விஜய்யிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள 60 கோடியை முருகதாஸிடம் கொடுத்து பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து தர சொல்லியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த 60 கோடியில் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் எல்லாம் கொடுத்து படப்பிடிப்பை நடத்தி முடித்தால் தனக்கு 10 கோடி மட்டுமே கிடைக்கும் என நினைக்கிறாராம் முருகதாஸ். ஆனால் அவர் தர்பார் படத்துக்கு வாங்கிய சம்பளம் 30 கோடி ரூபாய். அதனால் இந்த படத்துக்கு இரண்டாம் நிலை தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்து ஷூட்டிங்குக்கு அதிகமாக செலவு செய்யாமல் சிக்கனமாக படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முருகதாஸின் அதிருப்தியை தெரிந்துகொண்ட லைகா நிறுவனம், அந்த படத்தை தங்கள் கம்பெனியில் செய்யுமாறு அழைத்துள்ளது. மேலும் பட்ஜெட்டைக் கூட கொஞ்சம் உயர்த்திக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு மறுத்துவிட்டாராம் முருகதாஸ். காரணம் தர்பார் படத்தின் தோல்வியால் அவருக்கு தரவேண்டிய சம்பளத்தில் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டதாம் லைகா.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அமரன்’ ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

புஷ்பா 2 படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்… DSPக்குப் பதில் தமன் வந்த பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த சிம்பு.. கொண்டாட்டத்துக்குத் தயாரான TR!

சூர்யாவின் ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் த வெ கா கொடியா?... சென்சாரில் வந்த பிரச்சனை!

சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments