Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாறன் படக்குழுவினரின் காதலர் தின போஸ்டர்!

மாறன் படக்குழுவினரின் காதலர் தின போஸ்டர்!
, செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (10:42 IST)
மாறன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றது. இதையடுத்து நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தின் மற்றொரு போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மாளவிகா மோகனனுடன் நெருக்கமாக தனுஷ் இருக்கும் வகையில் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.  விரைவில் இந்த படம் ஓடிடி வெளியீடாக வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் சப்ஸ்க்ரிப்ஷன் அளிக்கும் அமேசான் ப்ரைம்!