Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎஃப் 2 உடன் மோதும் மாதவனின் ராக்கெட்ரி!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (15:39 IST)
மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன்.

இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் இந்த படம் ரிலீஸாக உள்ளதாகவும், அதற்கான பணிகளை மாதவன் மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதே நாளில் கே ஜி எப் 2 திரைப்படத்தின் ரிலிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments