மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் செலீனாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் விஜய் சேதுபதி ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பின்னர், கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.
தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே திடீரென தனது உடலை கட்டான தோற்றத்திற்கு மாறி மாடர்ன் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது வித்யாசமான மாடர்ன் சேலையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.