Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்… ராயன் படத்தைப் பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

vinoth
செவ்வாய், 30 ஜூலை 2024 (11:02 IST)
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரின் 50 ஆவது படமான ராயன் கடந்த வாரம் வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வழக்கமாக தனுஷ் படங்கள் செய்யும் கலெக்‌ஷனை விட அதிகம். அடுத்தடுத்த விடுமுறை நாட்களிலும் இந்த படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் முதல் மூன்று நாட்களில் இந்த படத்தின் கலெக்‌ஷன் 70 கோடி ரூபாய் அளவுக்கு ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு. அதில் “ராயன் படத்தை மிகச்சிறப்பாக இயக்கி நடித்துள்ளார் தனுஷ். எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். மேஸ்ட்ரோ ஏ ஆர் ரஹ்மானின் இசை அபாரம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments