Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த இரண்டாவது பட்டம்

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (18:33 IST)
நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் ஆகிய அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் பயணம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின், வலுவான பின்னணி இருப்பதால் சமீபகாலமாக அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனையடுத்து திமுக தொண்டர்கள் அவருக்கு 'மூன்றாம் கலைஞர்' என்ற பட்டத்தை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் உதயநிதிக்கு 'மக்கள் அன்பன்' என்ற புதிய பட்டத்தை கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள 'கண்ணே கலைமானே' படத்தின் டைட்டில் கார்டில் 'மக்கள் அன்பன்' உதயநிதி என்றே போடப்படும் என தெரிகிறது. மூன்றாம் கலைஞர் பட்டத்திற்கே நெட்டிசன்கள் ரவுண்டு கட்டி கலாய்த்து வரும் நிலையில் இந்த மக்கள் அன்பன் அவர்களுடைய கையில் சிக்கி என்ன பாடுபடப்போகிறது  என்பதே தற்போதைய அச்சமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments