Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மம்மூட்டி ஜோதிகா நடிக்கும் ‘காதல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மம்மூட்டி ஜோதிகா நடிக்கும் ‘காதல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, சனி, 4 நவம்பர் 2023 (11:30 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார்.

இநிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுற்றதை அடுத்து இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சலார் படத்தின் பிரம்மாண்ட சண்டைக் காட்சிக்காக 750 வாகனங்கள்!