Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மணிரத்தினத்திற்கு மனைவி சுஹாசினிக்கு முன்பே வேறு காதல்?

மணிரத்தினத்திற்கு மனைவி சுஹாசினிக்கு முன்பே வேறு காதல்?
, புதன், 7 செப்டம்பர் 2022 (17:06 IST)
மணிரத்தினத்திற்கு, சுஹாசினியின் காதலுக்கு முன்பே வேறு காதல் இருந்திருக்கிறது என நடிகர் பார்த்திபன் பேச்சு.


இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக இருந்து வந்தது பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இரண்டு பாக திரைப்படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெய்ராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. 

இந்த நிகழ்வில் நடிகர் பார்த்திபன் பின்வருமாறு பேசினார், போன வாரம் பார்த்த படம் பழகிவிட்டது, போன மாதம் கேட்ட கதை பழையதாகி விட்டது. ஆனால், பல ஆண்டுகளாக நடந்த கதை கல்கியின் எழுத்தால் சரித்திரமாக மாறிவிட்ட இந்த படைப்பு, அவருடைய கனவை இன்று கலக்கி இருக்கிறார் மணி ரத்னம் அவர்கள். நான் பேசும்போது நீங்கள் கை தட்டி பாராட்டுவது போல் இன்று கல்கி இருந்திருந்தால் மணிரத்தினம் அவர்களை கைதட்டி பாராட்டியிருந்திருப்பார்.
webdunia

மணி ரத்னத்திற்கு சுஹாசினிக்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்கிறது. அது பொன்னியின் செல்வன் என்று நினைக்கிறேன். அப்படி காதல் இல்லை என்றால் இந்த படத்தை நிச்சயம் அவர் செய்திருக்க முடியாது. பொன்னியின் செல்வனில் கடைசி புள்ளி எழுத்து நான்தான்.

நடிக்கவே வராதவர்களுக்கு கூட மணி சார் இருந்தால் நடிக்க வந்து விடும். இப்படத்தின் வாய்ப்பு கிடைத்ததும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாம் தூய தமிழில் பேசினோம். ஆகையால், நமக்கு தமிழ் நன்றாக பேச வரும் என்று இறுமாப்புடன் சென்றேன். ஆனால், அங்கு சென்றதும் ஒரு மாப்பு கூட வேலை செய்யவில்லை.

முதல் நாள் படப்பிடிப்பிலேயே மணிரத்தினம் சார் அவ்வளவு தூய தமிழில் எல்லாம் பேச வேண்டாம் என்று கூறி மட்டம் தட்டினார். மட்டம் தட்டுவது என்றால் தமிழில் இரண்டு அர்த்தம் இருக்கிறது. கேவலப்படுத்துவது என்று ஒரு அர்த்தம், இன்னொன்று கட்டடம் கட்டுவதற்காக மட்ட பலகையை வைத்து சுவரை சமன்படுத்த பயன்படுத்துவதுதான் மட்டம் தட்டுவது என்பது. அதைத்தான் மணிரத்னம் சார் செய்தார்.

பல வருடமாக செயல்படுத்த முடியாத கனவு படத்தை பின்னணியாக இருந்து நனவாக்கிய லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களுக்கு பெரிய நன்றி. லைகாவின் பயணத்தில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெய்டுக்குப் பின்னர் தடைபட்டு நிற்கும் பெரிய படங்களின் ஷூட்டிங்!