Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகள் வயதுடைய நடிகையை கட்டித்தழுவி முத்தம்! சர்ச்சையில் சிக்கிய நாகார்ஜுனா!

Advertiesment
Nagarjuna
, திங்கள், 17 ஜூன் 2019 (13:26 IST)
தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்துள்ள நடிகர் நாகார்ஜுனா தெலுங்கில் உச்ச கதாநாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 
 
தெலுங்கி பல்வேறு மெகாஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் அர்ஜுனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் குவிந்து கிடக்கின்றனர். ஒரு தலைமுறையை கடந்த பிறகும் தனது மவுஸ் குறையாமல் டாப் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 
 
தற்போது இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘மன்மதடு-2’ படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகிளாக ரகுல்பிரீத் சிங், அக்‌ஷரா கவுடா நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Nagarjuna

 
இந்த படத்தின் டீசரில் ஒரு பெண்ணுக்கு நாகார்ஜுனா உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுப்பதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் யாருக்கு முத்தம் கொடுக்கிறார்? ரகுல்பிரீத் சிங்குக்கா? அல்லது அக்‌ஷராவுக்கா என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியதோடு, மகள் வயதுடைய பெண்ணுடன் இப்படி முத்த காட்சியில் நடிக்கலாமா? இந்த வயதில் உங்களுக்கு முத்த காட்சி தேவையா என்று நெட்டிசன்கள் கோபத்துடன் கண்டித்து வருகிறார்கள்.

Nagarjuna
 
இந்நிலையில் பாடகி சின்மயியையும் இதற்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து, நெட்டிசன்கள் சிலர் உங்கள் கணவர் வயதான நடிகரையும் மகள் வயது நடிகையையும் முத்த காட்சியில் நடிக்க வைத்துள்ளாரே? இதை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி சின்மயியையும் சிலர் கண்டித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிட்டு படத்தை பார்த்துதான் லஸ்ட் ஸ்டோரிஸில் நடித்தேன் - கியாரா அத்வானி ஓபன் டாக்!