Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த இயக்குனர்!

மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த இயக்குனர்!
, வியாழன், 27 ஜூலை 2023 (13:52 IST)
ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ் நடிப்பில், ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்த படம் ‘மரகத நாணயம்’. தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மொக்கை போடும் பேய்ப் படங்களுக்கு நடுவில், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது இந்தப் படம். அதனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி, வசூலையும் குவித்தது.

அதையடுத்து ஆதி நடித்த வீரன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் நீண்டகாலமாக மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக இயக்குனர் ஏ ஆர் கே சரவன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ஜெயிலர்’ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!