Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாரி செல்வராஜின் வாழை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாரி செல்வராஜின் வாழை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

, திங்கள், 29 ஜூலை 2024 (11:34 IST)
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எழுத்தாளரான மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றியை  அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு மாமன்னன் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம், மாரி செல்வராஜ் தான் சிறுவயதில் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக் லைஃப் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிய கமல்ஹாசன்!