ஹாலிவுட் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்ஸேசிக்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சத்யஜித் ரே பெயரில் விருது வழங்கப்பட உள்ளது.
52-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்நிலையில் ஹாலிவுட் ஜாம்பவான் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்ஸேசிக்கு இந்த விழாவில் இந்திய சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் சத்யஜித் ரே பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் ஸ்கார்ஸேஸி கலந்துகொள்ளவில்லை என்றாலும் இது சம்மந்தமாக நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் என் மாஸ்டர்களில் ரே ஒருவர். நான் எப்போதும் அவரின் படங்களை என்னுடன் வைத்திருக்கிறேன். பதேர் பாஞ்சாலி பார்த்த போதே அவர் படங்களின் மீதான காதல் தொடங்கிவிட்டது. அவர் படங்களில் இசையைப் பயன்படுத்தும் முறை என் படங்களில் தாக்கம் செலுத்தியுள்ளது. என் மகள் சிறு குழந்தையாக இருந்த போது நான் காட்டிய படங்களில் பதேர் பாஞ்சாலியும் ஒன்று எனக் கூறியுள்ளார்.