Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 11 நாளில் பேக் அப்.... மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் அப்டேட்..!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (12:31 IST)
பிகில் படத்தை தொடர்ந்து கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் "மாஸ்டர்" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். 
 
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறி வைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து அண்மையில் வெளிவந்த குட்டி கத என்ற பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 
 
விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் ஈர்த்த இந்த பாடல் தற்போது வரை 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது என தகவல் கிடைத்துள்ளது. எனவே இனி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments