#WeStandWithMaster என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் நேற்று திடீரென 'மாஸ்டர் படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தயாரிப்பாளர் பிரிட்டோ, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் டுவிட்டர் மூலம் இணையத்தில் பரவி வரும் காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்றும் அந்த காட்சிகள் எங்கிருந்து பகிரப்படுகிறது என்பது குறித்து தகவல் தெரிந்தால் உடனே தங்களுக்கு தெரிவிக்கவும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் 'மாஸ்டர் படத்தை இணையத்தில் கசிய விட்டவர் குறித்த தகவல் தெரியவந்ததாகவும் அந்த நபர் ஒரு தனியார் டிஜிட்டல் சினிமா நிறுவனத்தின் ஊழியர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே #WeStandWithMaster என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள சினிமா நடிகர்களின் ரசிகர்களும் மாஸ்டர் பட காட்சிகளை பகிர வேண்டாம் என அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர்.