மாஸ்டர் படம் இன்று முதல் திரையரங்குகளிலும் ஓடிடி தளத்திலும் ஒன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் அதே நேரத்தில் இந்த படம் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது நேற்று நள்ளிரவு முதல் இந்த படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் இனிமேல் .தியேட்டருக்கு இந்த படத்தை பார்க்க பார்வையாளர்கள் வருவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் மீது கோபமாக இருப்பதாகவும், அவரின் வருங்கால படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்பட்டது.
அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக லலித் இனிமேல் திரையரங்கில் படம் ஓடும் நாட்களின் வருவாய் முழுவதையும் திரையரங்க உரிமையாளர்களே வைத்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டாராம். அதனால் திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் இன்றும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஓடிடியில் ரிலீஸானதால் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் அதிகளவில் வரமாட்டார்கள் என நினைத்த நிலையில் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இந்த வாரமும் வந்துகொண்டுதான் இருக்கிறதாம். இது திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கே இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளதாம். சில திரையரங்குகளில் 70 சதவீதம் வரை எல்லாம் இருக்கைகள் நிரம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.