Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மெய்யழகன் மூலம் 10 சதவீதம் லாபம் வந்தால் போதுமென்று நினைத்தேன்… ஆனால்? – சூர்யா பகிர்ந்த தகவல்!

மெய்யழகன் மூலம் 10 சதவீதம் லாபம் வந்தால் போதுமென்று நினைத்தேன்… ஆனால்? – சூர்யா பகிர்ந்த தகவல்!

vinoth

, சனி, 2 நவம்பர் 2024 (11:24 IST)
கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக உருவாகியிருந்த மெய்யழகன் திரைப்படம் பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்தது.

ஆனால் படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களும் வராமல் இல்லை.  படம் ஆமை வேகத்தில் நகர்வதாகவும், படம் முழுவதும் இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக் கொண்டே இருப்பது ஒரு மெகா சீரியல் உணர்வை ஏற்படுத்துவதாகவும் சில எதிரமறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் கதாபாத்திரம் போன்ற ஒருவர் நிஜ வாழ்க்கையில் இருக்க முடியாது. அது ஒரு உடோபியன் கதாபாத்திரம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மெய்யழகன் பட தயாரிப்பாளர் சூர்யா “இந்த படம் மூலமாக 10 சதவீதம் லாபம் வந்தால் போதுமென்று நினைத்தேன். ஆனால் எனக்கு 25 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. இதுவே எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. மனித உறவுகளைப் பேசும் திரைப்படங்களை ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்பதை மெய்யழகன் நிரூபித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமரன் பேன் இந்தியா வசூலுக்கு உதவிய சாய்பல்லவி..!