Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்யராஜ் பேசிய சர்ச்சை கருத்து – ஆதரவு தெரிவித்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம் !

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (18:37 IST)
பொள்ளாச்சி பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் தவறு உள்ளது என இயக்குனர் பாக்யராஜ் பேசியதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஒரு கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் ”பொள்ளாச்சி பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல! எச்சரிக்கையாக இல்லாத அந்த பெண்களும் காரணம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சில பெண்கள் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

ஆனால் இந்த  விஷயத்தில் முதன் முதலாக பாக்யராஜுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்
’பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது என்று மனதில் பட்டதை பேசுவதோடு நில்லாமல் சமுதாய நலன் சார்ந்து பெண்களை சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது. மிகவும் பாராட்டத்தக்கது. மட்டுமல்லாமல் துணிச்சலான கருத்தும் ஆகும். தொடர்ந்து நீங்கள் இந்திய கலாசாரத்தை சிதைக்கின்ற வகையிலும் பால்மனம் மாறா குழந்தைகளின் கொடூர கொலைகளுக்கு காரணமாக இருக்கும் பெண்களை பற்றிய உங்கள் கருத்துகளை பதிவிட்டு சமுதாய சீர்திருத்தத்தினை ஏற்படுத்த வேண்டும்.

பெண்களைப் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துகளை ஆண்கள் பாதுகாப்பு சங்கம் பாராட்டுகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்