Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வ தகவல்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (14:01 IST)
விஜய் நடித்த மெர்சல் தமிழில் மிகவும் அருமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. படமும் ரூ. 21௦ கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதன் தெலுங்கு பதிப்பிற்கு நீடித்த வந்த  தடை தற்போது நீங்கியிருக்கிறது.

 
இப்படம் கடந்த வாரம் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதற்கான சான்றிதழ் தராமல் இழுத்தடித்தனர். இதனால் ஒரு வாரத்துக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டிய படம் வெளிவரவில்லை. படத்தில்  ஜிஎஸ்டி வரிக்கு எதிரான வசனங்கள் இருப்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கை குழு சான்றிதழ் தராமல்  இழுத்தடிப்பதாக கூறப்பட்டது. 
 
இதனை தணிக்கை குழு தலைவர் மறுத்தார். இந்த நிலையில் நேற்று தணிக்கை குழு மெர்சல் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதனை தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் உறுதிபடுத்தியிருப்பதோடு  தணிக்கை சான்றிதழையும் வெளியிட்டுள்ளார். இதனால் தெலுங்கு மெர்சல் வருகிற 10ந் தேதி வெளியாக இருப்பதாக  அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. 
 
தமிழை போல தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வர வேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தில்லி பாபு நினைவேந்தல் கூட்டம்!

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments