Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

65 வயதில் ஆக்‌ஷன் ஹீரோவாக ரி எண்ட்ரி… தொடங்கியது மைக் மோகன் பட ஷூட்!

65 வயதில் ஆக்‌ஷன் ஹீரோவாக ரி எண்ட்ரி… தொடங்கியது மைக் மோகன் பட ஷூட்!
, வெள்ளி, 25 மார்ச் 2022 (11:37 IST)
வெள்ளி விழா நாயகனான மைக் மோகன் நடிப்பில் ஹரா என்ற படம் உருவாக உள்ளது.

கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார். இந்த படத்தில் குஷ்பூ கதாநாயகியாக நடிக்க உள்ளார். மோகனும் குஷ்பூவும் இணைந்து நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.
webdunia

 
இந்நிலையில் தற்போது ஹரா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஹரா ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேற லெவல் குவாலிட்டியில் வெளியாகும் ஓடிடியில் வலிமை… வெளியான தகவல்!