Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய்க்கு ஆதரவளிப்பது பற்றி அமைச்சர் உதயநிதி கருத்து...

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (18:22 IST)
விஜய்யை ஆதரிப்பது பற்றி தன் கருத்தை தெரிவித்துள்ளார் அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.  இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர்  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரைலர் ரிலீஸ் நடைபெற்ற நிலையில் இப்படம் வரும் 29 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ''மாமன்னன் ஒரு அரசியல் படம். அப்பா பையன் கதையாகும். இயக்குனர் வடிவேலுவின் தீவிர ரசிகர் என்பதால்  நான் வடிவேலுவுடன் பேசி இப்படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றேன்'' என்று கூறினார்.

மேலும், ''இப்படம் ஜாதி மறுப்பு படம். இப்படம் என் கடைசிப் படம்.  நான் ஆசைப்பட்டு  நடித்த படமும் இதுதான்.  நடிகர் விஜய் அரசியல் வருகை பற்றி தெளிவாகக் கூறவில்லை.  அவர் தன் அரசியல் கொள்கைகளை கூறினால், அதன் பின்  விஜய்யை ஆதரிப்பதா?வேண்டாமா என்று முடிவு செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments