இளையராஜா 75- இசை நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நேற்று நடைபெற்று முடிந்தது. வழக்கமான இளையராஜா கச்சேரிகளை விட நேற்று வெகு சாதாரணமாகவே நடந்து முடிந்தது.
இளையராஜாவின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரைக் கௌரவப்படுத்தும் விதமாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தும் இரண்டு நாள் இசை விழா நேற்றோடு முடிந்தது. முதல் நாள் விழா விழா நேற்ற முன் தினம் தொடங்கியது. இந்த விழாவில் இந்த விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று விழாவின் முதல் நாள் ஆளுநர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதையடுத்து இளையராஜா 75 மலரையும் வெளியிட்டார். பின்பு இளையராஜாவின் பாடல்களுக்கு நடிகர் நடிகையர்கள் நடனம் ஆடி விழாவை சிறப்பித்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்தது. விழா பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்ட ராட்சசத் தொலைக்காட்சிகளின் தொழில் நுட்பக் கோளாறால் சிறிது தாமதமாகவேத் தொடங்கியது. கச்சேரி ஆரம்பம் முதலே ஸ்பீக்கர்கள் சரியான ஒலி அளவின்றி அலறவிடப்பட்டன. திடீர் திடீரென்று ஒலி அதிகமாகியும் குறைவாகியும் பார்வையாளர்களை எரிச்சல் ஊட்டின. அதேப் போல பார்வையாளர்களைத் தொல்லை செய்யும்விதமாக பாப்கார்ன், டி மற்றும் தண்ண்டீர் பாட்டில் விற்பவர்கள் அன்பிவரும் மேடையை மறைக்கும் விதமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சென்று கவனத்தை சிதைத்தனர்.
நிகழ்ச்சிக்கு இடையில் சுஹாசினி , விஷால், குஷ்பூ போன்றவர்கள் தோன்றி விழாவிற்கு வந்திருந்த நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து இளையராஜாப் புகழ் பாட வைத்தார்கள். இது பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டது. நள்ளிரவு ஒருமணி நேரம் வரைக் கச்சேரி நடந்தும் மிகக் கம்மியான அளவிலேயேப் பாடல்கள் இசைக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் இதுவேயாகும். மேலும் விழாவைத் தொகுத்தளிக்கிறேன் என்றப் பெயரில் சுஹாசினி போன்றவர்கள் கச்சேரிக்குத் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பேசி நேரத்தை வீணடித்தனர். மறந்தும் கூட ஒரு வார்த்தைக்கூட ராஜா இசையின் நுணுக்கங்களைப் பற்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.
அதுபோல பாடியப் பாடகர்கள் பலபேர் ஒரிஜினல் பாடல்களின் தரத்திற்குப் பாடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. முன்னணி பாடகரான மனோக் கூட சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற ஹேப்பி நியூ இயர் பாடலை மிகவும் சாதாரணமாகப் பாடினார்.
விழாவின் ஹைலைட்களில் ஒன்றாக இருந்தன கமல் பாடிய பாடல்கள் . ஆனால் ரசிகர்கள் அவரைத் தென்பாண்டி சீமையிலேப் பாடலைப் பாட சொல்ல நேரமின்மையால் அவரால் பாடமுடியாமல் போனது. இந்தக் குறைகளை எல்லாம் உணர்ந்ததாலோ என்னவோதான் விழா முடிவில் ராஜா இரண்டு நாட்கள் கச்சேரி வையுங்கள் என சொன்னேன். ஆனால் என்பேச்சைக் கேட்காமல் ஒருநாளில் வைத்து முடித்து விட்டார்கள். அதனால் உங்களை முழுமனதோடு வீட்டுக்கு அனுப்ப முடியவில்லை என பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்பது போல பேசினார்.
ஆனால் இதையெல்லாம் மறக்க செய்யும் விதமாக சில அற்புதத் தருணங்கள் விழா மேடையில் நடந்தேறின. அவை அடுத்த பதிவில்…